எப்படி இருக்க வேண்டும் உங்கள் ஆலோசகர்?
முன்பெல்லாம் தொழில் தொடங்கி ரூ. 100 கோடி வருமானம் ஈட்டுவதற்கு குறைந்தது 5 ஆண்டுகளாகும். சில சமயம் இது 8 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகள் கூட ஆகும். சில தொழிலதிபர்கள் ரூ. 100 கோடி வருமானத்தை தங்கள் வாழ்நாளில் கூட பார்க்க முடியாமல் போனதுண்டு. இவை அனைத்தும் பழைய கால பொருளாதார சிந்தனை சார்ந்த தொழில்கள். நவீன யுகம் இது. இங்கு அனைத்துமே ஜெட் வேகம்தான். தகவல் தொழில்நுட்பம் இதற்கு உறுதுணையாக இருக்கிறது. இதனால் புதிதாக தொழில் தொடங்குவோர் ரூ. 100 கோடியை எட்டுவதற்கு இப்போது 18 மாதங்கள் போதுமானது. அதிகபட்சம் 2 ஆண்டுகளில் பலரும் இந்த இலக்கை எட்டி விடுகின்றனர்.
பெரிய தொழிற்சாலை, அதில் உற்பத்தி இயந்திரங்கள், அதை நிறுவ ஆகும் காலம், மின் இணைப்பு பெறுவது, தண்ணீர் வசதி பெறுவது உள்ளிட்டவற்றுக்கு அதிக காலம் ஆகலாம். அதுவும் இப்போது உருவாக்கப்படும் தொழிற்பூங்காக்களில் உடனடி உணவு போல கிடைக்கத் தொடங்கிவிட்டது.
பெரிய தொழிற்சாலை, அதில் உற்பத்தி இயந்திரங்கள், அதை நிறுவ ஆகும் காலம், மின் இணைப்பு பெறுவது, தண்ணீர் வசதி பெறுவது உள்ளிட்டவற்றுக்கு அதிக காலம் ஆகலாம். அதுவும் இப்போது உருவாக்கப்படும் தொழிற்பூங்காக்களில் உடனடி உணவு போல கிடைக்கத் தொடங்கிவிட்டது.
தகவல் தொழில்நுட்ப உலகில் வெறுமனே ஆப்ஸ் எனப்படும் செயலிகளை உருவாக்கி வெற்றிபெற்ற நிறுவனங்கள் பலப்பல. இணையதள வர்த்தகத்தில் புதிய மைல் கல்லை ஏற்படுத்திய பிளிப்கார்ட், இருக்குமிடத்திலிருந்து பயணத்துக்கான பஸ் டிக்கெட்டை பதிவு செய்ய உதவும் ரெட் பஸ் நிறுவனமும் சமீபத்திய வெற்றி நிறுவனங்களின் அடையாளங்கள்.
தொழில் தொடங்குவதற்கான சிந்தனையும், செயலூக்கமும் இருந்தால் பிற வசதிகள் அனைத்தும் உடனடியாக கிடைக்கும். கடந்த சில வாரங்களாக தொழிலில் வெற்றி பெறுவதில் ஆலோசகர்கள் எனப்படும் மென்டார்களின் பங்களிப்பைப் பார்த்தோம். வெற்றி பெற்ற நிறுவனங்களுக்கு பெரும்பாலும் மிகச் சிறந்த மென்டார்கள் இருந்திருக்கிறார்கள். இன்னமும் ஆலோசனை கொடுத்துக் கொண்டுதானிருக்கிறார்கள். ரெட் பஸ், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்களுக்கும் மென்டார்கள் உள்ளனர்.
தொழில் முனைவோருக்கும் மென்டா ருக்குமான சம்பந்தம் மிகவும் முக்கியம். இருவருக்கிடையிலான புரிதல் மிக மிக அவசியம். இது திருமணப் பொருத்தம் போன்றது. ஒருவரது வாழ்வில் திருமணம் எப்படி அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறதோ அதைப் போல தொழிலில் உங்களை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வதில் மென்டாரின் பங்கு அளப்பரியது. இதனால் வெறுமனே மென்டார் என்பவர் மட்டுமே உங்களது தொழிலுக்கு போதுமானவர் அல்லர். உங்களது லட்சிய இலக்கை எட்டக்கூடிய ஆலோ சனைகளை வழங்கக் கூடியவராக இருக்க வேண்டும். எனது கணிப்பின்படி ஏற்கெனவே திறமையான வெற்றி பெற்ற தொழிலதிபர்கள்தான் சிறந்த மென்டாராக இருக்க முடியும்.
சிறந்த மென்டாராக இருப்பவர் தொழில் முனைவோரோடு இணைந்து செயல்படுபவராக இருக்க வேண்டும். மிகவும் இக்கட்டாண தருணங்களில் தொழில்முனைவோருக்கு ஆலோசனை அளிப்பவராக இருக்க வேண்டும்.
மென்டாரை முழுமையாக பயன்படுத்திக் கொள்வது தொழில்முனைவோரது கையில்தான் உள்ளது. வெற்றிகரமான தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் மென்டாரின் ஆலோசனையை முழுமை யாகப் பயன்படுத்திக் கொண்டவை யாகத்தான் உள்ளன. சிறந்த மென்டார் என்பவர் தனி நபர்தான். அவர் எப்போதுமே பிஸியாகத்தான் இருப்பார். மென்டார் எந்தத் தொழிலில் நிபுணத்துவம் பெற்றவரோ அத்துறையில் அவரது ஆலோசனையை தொழில் முனைவோர் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
எங்கள் தொழிலுக்கு மென்டார் எங்கே கிடைப்பார்? மென்டாரை எங்கே தேடுவது? என்ற உங்களின் தேடலுக்கான விடையை அடுத்த வாரம் பார்க்கலாம்.
Comments
Post a Comment